Sunday, August 19, 2007

ALAYAMANI, SATTI SUTHADADA KAI VITA {சட்டி சுட்டதடா கை விட்டதடா}

படம் : ஆலயமணி
இசை : விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: சட்டி சுட்டதடா கை விட்டதடா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்


சட்டி சுட்டதடா கை விட்டதடா (2)
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா

(சட்டி)

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா

(சட்டி)

ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா (2) - மனம்
சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா

(சட்டி)

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா (2)
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

(சட்டி)

No comments: