Sunday, August 19, 2007

ALAYAMANI, KAL ALLAM MANIKA {கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா}

படம் : ஆலயமணி
இசை : விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
குரல்: டி எம் சௌந்தரராஜன், பி சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா (2)
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா (2)

(கல்லெல்லாம்)

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் காலைக்கனியாக்குமுந்தன் ஒரு வாசகம் (2)
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா (2)
இல்லயென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா

(கல்லெல்லாம்)

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா (2)
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி (2)
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி

(கல்லெல்லாம்)

No comments: