Sunday, August 19, 2007

VASANTHA MALIGAI, THAYAKAM ENNA {தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன...}

படம் : வசந்த மாளிகை
இசை : எம் எஸ் விஸ்வனாதன்
பாடல்: மயக்கமென்ன இந்த மௌளனம் என்ன
குரல்: டி எம் சௌந்தரராஜன், சுசீலா
வரிகள்: கன்ணதாசன்


மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன அன்புக் காணிக்கை தான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா - என்
காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலமாய் விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும் கட்டியணைத்து கவி பாட

(மயக்கமென்ன)

அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் புன்னகை எடுத்து மதுவருந்தாமல் விட மாட்டேன்
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் - உன்
உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன்

(மயக்கமென்ன)

No comments: