Sunday, August 19, 2007

VASANTHA MALIGAI, KUDIPATHARKU ORU {குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்}

படம் : வசந்த மாளிகை
இசை : எம் எஸ் விஸ்வனாதன்
பாடல்: இரண்டு மனம் வேண்டும்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்


குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம் - அவளை
மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலம் - ஆனால்
இருப்பதோ ஒரு மனம்...நான் என்ன செய்வேன்?

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

(இரண்டு)

இரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால் உள்ளம் ஒன்று போதாதே!

(இரண்டு)

கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளைத் தண்டிக்க என்ன வழி?

(இரண்டு)

No comments: