Sunday, August 19, 2007

ALAYAMANI, KANNANA KANNANUKU {கண்ணான கண்ணனுக்கு அவசரமா}

படம் : ஆலயமணி
இசை : விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: கண்ணான கண்ணனுக்கு அவசரமா
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், பி சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்


வானம்பாடி...
ஆஹாஹஹா...

கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா (2)
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது கேட்கலையா

(கன்னான)

பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா (2)
கண்ணழகை நான் காணக் கூடாதா கல்யாணத் தேரோடக் கூடாதா

(பொன்னான)

உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா (2)
ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ

(உள்ளத்தில்)

கன்னத்தில் முத்தமிட்டு கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா (2)

(கண்ணான)

மஞ்சத்தில் உன்னை வைத்து மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா (2)
அந்தமலர் வாடுமென்று சொந்தமலர் வண்ணம் கண்டு
இந்தமலர் வேண்டுமென்று நான் பாடவா (2)

(கண்ணான)

"வானம்பாடி
நீ ஒரு விசித்திரமான பொண்ணு
நீ என்னைக் காதலிக்கிறியா இல்ல வௌளயாடறியா
எனக்கு ஒண்ணுமே புரியல"

No comments: