Sunday, August 19, 2007

Ullam Ketkumae Lyrics 'Ennai Pandhada', {உள்ளம் கேட்குமே 'என்னை பந்தாட' பாடல் வரிகள்}

படம் : உள்ளம் கேட்குமே
பாடல் : என்னை பந்தாட
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ், மதுமிதா


என்னை பந்தாடப் பிறந்தவளே
இதயம் ரெண்டாகப் பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண்கொண்டு கடைந்தவளே
உன்னைக்கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல்கொள்ள வாராயோ
(என்னை பந்தாட)

செங்குயிலே சிறு வெயிலே
மண்ணிலுள்ள வளம் இன்னதின்னதென
செயற்கைக்கோள் அறியும் பெண்ணே
உன்னிலுள்ள வளம் என்னதென்னதென
உள்ளங்கை அறியும் கண்ணே
நீ அழகின் மொத்தமென்று சொல்லி
அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி
செங்குயிலே சிறு வெயிலே
வாய்திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழவிடு அன்பே

இனியவனே இணையவனே
உன்னைக் காணவில்லை என்னும்போது
நெஞ்சில் சின்னப் பைத்தியங்கள் பிடிக்கும்
பஞ்சு மெத்தைகளில் தூக்கமில்லை என்று
பற்கள் தலையணையைக் கடிக்கும்
உனைத் தொட்டுப் பார்க்க மனம் துடிக்கும்
நெஞ்சில் விட்டுவிட்டு வெடி வெடிக்கும்
சின்னவனே என்னவனே
மூக்குமீது மூக்கு வைத்து
நெற்றி முட்டிவிட வாடா

என்னைக் கொண்டாடப் பிறந்தவனே
இதயம் ரெண்டாகப் பிளந்தவனே
ஓசை இல்லாமல் மலர்ந்தவனே
உயிரை கண்கொண்டு கடைந்தவனே
உன்னைக்கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல்கொள்ள வாராயோ அன்பே

No comments: