Friday, August 17, 2007

Vettayaadu Vilayaadu Lyrics 'Uyirile Enadhu Uyirile', {வேட்டையாடு விளையாடு 'உயிரிலே எனது உயிரிலே' பாடல் வரிகள்}

படம் : வேட்டையாடு விளையாடு
பாடல் : உயிரிலே எனது உயிரிலே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : மஹாலஷ்மி, ஸ்ரீநிவாஸ்


உயிரிலே எனது உயிரிலே
ஒருதுளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்

ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்கமாட்டேனே

(உயிரிலே எனது)

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமோ ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்து நீயும் விலக
தத்தளித்து நானும் மருக
என்ன செய்வேனோ
(உயிரிலே எனது)

ஏதோ ஒன்று என்னை தடுக்குதே
பெண்ணா நீயும் என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள் ஆறாமல்
தேறாமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னைச் சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்
(ஏன் என்னை)

No comments: