படம் : பருத்தி வீரன்
பாடல் : அறியாத வயசு
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : இளையராஜா
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடியாத்தி ரெண்டும் பறக்குதே
செடிபோல ஆசை மொளைக்குதே
வெட்டவெளிப் பொட்டலிலே மழைவந்தா
இனி கொட்டாங்குச்சி கூரையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியிலே சீர்வந்தா
இங்கே பட்டாம்பூச்சி வண்டியிலே ஊர்வரும்
ஓஹோ அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டுப் படிக்கல
எந்தக் கெழவியும் சொன்ன கதையில
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
ஒறவுக்கு இதுதான் தலைமை
இதை உசுரா நெனைக்கும் இளமை
காதலே கடவுளின் ஆணை
அவன் பூமிக்குத் தொட்டுவச்ச சேனை
ஒடைமாத்தி நடைமாத்தி அடியாத்தி இந்த வயசுல
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
கறந்தபாலையே காம்பில் புகுத்திட
கணக்குப் போடுதே ரெண்டுந்தான்
கோரைப்புல்லிலே மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது தோளுல சாயுது
ஊரையும் ஒறவயும் மறந்து
நடுக்காட்டுல நடக்குது விருந்து
நத்தைக்கூட்டுல புகுந்து
இனி குடித்தனம் நடத்துமோ சேர்ந்து
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி இந்த வயசுல
(அறியாத வயசு)
Friday, August 17, 2007
Paruthi Veeran lyrics 'Ariyadha Vayasu', பருத்தி வீரன் 'அறியாத வயசு' பாடல் வரிகள்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
Awesome
Really great
Semma lyrics......
U1 best music
My favorite song sema lyrics
Superb
Vera level
U1 magical music director
Post a Comment