படம் : 7/G ரெயின்போ காலனி
பாடல் : கனாக் காணும்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : ஹரீஷ் ராகவேந்திரா, மதுமிதா, உஸ்தாத் சுல்தான் கான்
கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழிபோடும் கடிதங்கள்
வழிமாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ
இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும்நெருப்பினை விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்
உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவாய் இனி மழைவரும் ஓசை ஆ
(கனாக் காணும்)
நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறென்றால் நட்பு என்று பேரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதைத் தேடி போகிறதோ
திரிதூண்டிப் போன விரல்தேடி அலைகிறதோ
தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவிவந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆ
(கனாக் காணும்)
இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்திவேளை அழைக்கிறதே
அதிகாலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே
விழிமூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
படபடப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனித்துளியாய் அது மறைவது ஏன்
நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மனநடுக்கம் அது மிகக்கொடுமை ஆ
(கனாக் காணும்)
Friday, August 17, 2007
7/G Rainbow Colony Lyrics “Kanaa Kaanum”, {7/G ரெயின்போ காலனி “கனாக் காணும்” பாடல் வரிகள்}
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Awesome lyrics.. Thanks for aharsha
Thanks for sharing
Great job
Post a Comment